Friday, June 11, 2021

 உயிர் துடிக்கும்

மயிர் நெடுகும்

வயிர் பெருகும்

அயர் மிரட்டும்

துயர் துழற்றும்

செயர் சிருகும்

பெயர் விரகும்

சிறை நிலைக்கும்

பிணம் பிணம் பிணம் இது பிணமே.

Monday, May 28, 2018

இருள்சூழ் ஒரு மனையாம் அதிலே ஒரு குகையாம்.நுழைவாயில் இலயே பிழைசெய்தோர்க் அது இலயே. பிழையோ அது பிணியோ பிறைமூடிடும் இருளாம்.இருளாம் காற்றிருளாம் மதியிழந்தார் பேர் இருளாம்.       
குகையோ வலைவனையோ நரகம் என்னும் பொருளாம். அகரம் ஒரு ஒளியோ அதை முனைவோற்கொரு கதியோ. பிரம்மம் ஒரு நிலையாம் காயம் கடந்தோர்க்கு. பிரம்மம் ஒரு விலையாம் காயம் புனைந்தோர்க்கு.
பிணியோ வீண்பழியோ வினையோ கார்றிருளோ சரணாகதி சரணாகதி சரணம் எனும் கதியாம். இருள்நீங்கிட ஒலிசார்ந்திட சரணம் ஒரு கதியாம்.

Tuesday, April 18, 2017

முக்தி

தனையுனர்ந்து தானும் தெளிந்தே
உனையுணர வாசல் பார்த்து
பனைஉயரம் ஏறிநின்றேன்
சடைமுடியன் நின்னை கண்டிட !!
பிறைஉயரம் ஏறுமின்
தனையறியா மாந்தர்க்கு
வினைப்பயன் தந்திடும்
வித்தகன் நீ !!
சிறைக்காலம் பலக்கழிந்து
நிறைநாயகன் தானாகி
நின்றான் நிர்மலன்
நிகரற்ற ஜோதியாய்!!
அவன் தாள் வணங்கி
புதன் சனி பாராமல்
சிவன் சிவன் என்றுணர
யுவன் அவன் சிதிப்பான்!!
அந்தமான் காதலி
-------------------------
பொன்மாலை பொழுது, மனதை மறைத்தது சலனம்
புரிவதற்குள் புகுந்துவிட்டாள் !
எங்கிருந்து வந்தாய் என வினவும்முன்
வீழ்ந்துவிட்டேன் அவளிடத்தில்!
ஆங்கிலேயரின் கடைசி அடிமை நான்தான் போலும்
என்றளவிற்கு  மனம் அடிமைபட்டது.
சிலகாலம் சிரித்ததும், சத்தமின்றி அழுததும்
வந்து வந்து செல்ல
விழிப்பில் ஓர் கனாபோல்
வந்தவள் கலையத்தொடங்கினள்.
வந்தது தேவதையல்ல தீச்சுடருமல்ல
தேய்ந்துபோன என் நினைவுகள்.
சர்ச்சைக்குரிய ஆரியரைபோல்
வந்தது முழக்கத்துடன்
சென்றது தடம் தெரியாமல் .
குரங்கு மனிதனுக்கு நாகரிகம் அளித்த காதல் நாகரிக மனிதர்களை குரங்காக மாற்றியுள்ளது !
மாலைநேர மேகங்கள்

விரைந்து செல்லும் கால்கள் எதைத்தேடி செல்கிறதோ?
பழுதடையா பார்வை எதை காண தவிக்கிறதோ?
ஐந்தினையிலும் காணாத இன்பத்தை மனம்தான் தேடுகிறதோ?
ஏகாந்தத்தின் ஆடை அணிந்திருந்தும் உடன் ஏதோ இருப்பதென்ன?
என்சிந்தையிலும் பெண்ணில்லை சிறைக்குள்ளும் நான்னில்லை
ஆயினும் மாலைநேர மேகங்கள் முத்தமிட்டு கொள்கையில் மனதை
தைக்கிறது முகவரி இல்லா ஓர் எண்ணம்!